undefined

மருதமலை முருகன் கோவிலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்.. முழு விபரம்!

 

மருதமலை முருகன் கோயிலுக்கு நாளுக்கு நாள் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மலைப்பாதையில் அதிகளவிலான வாகனங்கள் வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை  நிறுத்துவதற்கும் இடமில்லாத நிலை உருவாகிறது. இந்நிலையில், இ-பாஸ் முறை அமல்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள  மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருதமலையில் அமைந்துள்ள மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அதன்படி, காலை 6 முதல் பிற்பகல்  1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும், பிற்பகல் 1 முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்கள் என நாள் ஒன்றுக்கு 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

இ-பாஸ் நடைமுறையில் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் கோயில் அலுவலகத்துக்கு தபால் அல்லது இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் இ-பாஸ் இல்லாமல் வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!