நாளை முதல் இபாஸ் கட்டாயம்... இன்று முதல் முன்பதிவு  தொடக்கம்!

 

  கோடைகாலத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து சாரை சாரையாக மக்கள் சுற்றுலாத்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஊட்டி , கொடைக்கானலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வார இறுதி நாட்களில் கேட்கவே வேண்டாம்.  இதனால் வாகன நெரிசலை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களின் எண்களையும், வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளம் மூலமாக தெரிவிக்க வேண்டும்.  

இ‌ பா‌ஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும்  சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் அனைவருமே  வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.  

அதன்படி இன்று காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.வெளிநாட்டுப் பயணிகள்  இமெயில் முகவரி மூலம்  விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.    நாளை மே 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும்.  இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!