undefined

6,000 பேருக்கு வேலைவாய்ப்பு... பட்டாபிராமில் டைடல் பார்க்... இன்று காலை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

 
சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்று காலை நவம்பர் 22ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்துள்ள பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் அமைந்துள்ள 21 மாடிகளைக் கொண்ட புதிய டைடல் பார்க் கட்டடத்தை திறந்து வைக்கிறார். 

சுமார் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரே நேரத்தில் 927 கார்கள் மற்றும் 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் 24 மணி நேர கண்காணிப்பு பாது​காப்பு வசதி, அரங்​கம், உடற்​ப​யிற்சிக் கூடம், உள்விளை​யாட்டு அரங்​கம், தியானம் செய்​வதற்கான அறை, மின்சார வாகனங்கள் சார்​ஜிங் செய்​வதற்கான வசதி, மருத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்​யப்​பட்​டுள்ளன

சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி மையம், மாடி தோட்டம். 13வது மற்றும் 16வது மாடிகளுக்கிடையே தொங்கும் தோட்டமும் அமைக்கப்பட்டு, அந்த இடத்துக்குப் பிரீமியம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை கட்டிடக் கொள்கையின்படி இந்திய பசுமைக் கட்டிட கவுன்சிலின் பிளாட்டினம் தரம் பெற்றுள்ளது இந்த கட்டிடம். பட்டாபிராமைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்துறை வளர்ச்சி மட்டுமல்லாது, தலமாறி வேலை தேடும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் உதவும்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!