undefined

2,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு; குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 |ஹரியாணாவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

 

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர்  5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர்  8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து பிரசாரங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

ஏற்கெனவே பிரசாரத்தின்போது தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் சண்டிகரில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

ஹரியாணாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000, ரூ. 500 மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், பழைய ஓய்வூதியத் திட்டம், இரண்டு லட்சம் பேருக்கு அரசு வேலை, 500 யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார் விலை, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முழு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. சண்டீகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!