undefined

தமிழகம் முழுவதும்  9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இமெயில் முகவரி கட்டாயம்... பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!

 

 தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதை மேம்படுத்தும் வகையில் தற்போது தமிழகத்தின் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்  9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இ -மெயில் முகவரி தரப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை திட்ட இயக்குநர் ஆர்த்தி பள்ளிகளுக்கு உத்தரவு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களின்  இ - மெயில் முகவரியை, பள்ளிக்கல்வியின் எமிஸ் மாணவர் விபரங்களுடன் இணைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  

இந்த தகவல்கள் மாணவர்களிடம் பெறப்பட்டு நவம்பர் 10முதல் பதிவேற்றம் செய்யத் தொடங்க வேண்டும். டிசம்பர்31ம் தேதிக்குள் முடிகக் வேண்டும். இதனை மாணவர்கள் உருவாக்குவது, அவைகளை பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்கள் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என  மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!