undefined

கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவுக்கு பேரழிவு... எலான் மஸ்க் கருத்து!

 
 

 

"கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவுக்கு பேரழிவு என்றும், டிரம்ப் அமெரிக்காவை காப்பாற்றுவார்" என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டொனால்டு டிரம்பிற்கு எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்பிற்கு ஆதரவான கருத்துக்களை எலான் மஸ்க் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனநாயகத்தையும் அமெரிக்காவையும் காப்பாற்றுவார். கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும். எனது வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை