பரபரப்பு வீடியோ... மைசூரு அரண்மனை வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட யானைகள்!
கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகையை ஒட்டி கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. மைசூரு அரண்மனையில் அமைதிக்கு பெயர் பெற்ற தசரா யானைகள் மைசூர் வளாகத்தில் மோதிக் கொண்டு ஓடியது அப்பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது. அப்போது, மைசூர் அரண்மனை வளாகத்தில் நேற்று செப்டம்பர் 21ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு உணவு உண்ணும் போது தசரா யானைகளான தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுச் சொத்துக்கும் சேதம் ஏற்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் தசரா யானைகள் முகாமில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை. தசரா யானைகள், பொதுவாக அமைதிக்கு பெயர் பெற்றவை. அவை பயிற்சி அமர்வுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியிலும், ராஜ மார்க்கா அல்லது தசரா ஊர்வல பாதையில் ஜம்பூ சவாரி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கூட அமைதியாகவே கம்பீரத்துடன் நடந்து செல்லும்.
மைசூரில் தசரா நிகழ்வு என்றாலே யானை சவாரிதான் பலருக்கும் ஞாபகம் வரும். அங்கு ஜம்பு சவாரி ஊர்வலமானது மிகவும் பிரசித்தி பெற்றது. சாந்தத்திற்கு பெயர் பெற்ற 2 யானைகளும் திடீரென மோதலில் ஈடுபட்டு மைசூர் வளாகத்தில் ஓடிய இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!