வேலை செய்வது தெரியாமல் மின் வினியோகம்.. மின்கம்பத்தில் லைன்மேன் உடல் கருகி பலி!
மின்விளக்கை சரி செய்வது தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் மின் வினியோகம் செய்ததால் லைன்மேன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோக காட்சிகள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், ராஜ்கபூரில் உள்ள தோஹத் பகுதியில் இந்த சம்பவம் நடந்தபோது, மின் இணைப்பை துண்டிக்காமல் எரியாமல் இருந்த மின்விளக்கை சரிசெய்ய லைன்மேன் முயன்றார். அப்போது மின்கம்பி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
விசாரணையில் இறந்தவர் ஒப்பந்த தொழிலாளி சாந்தகுமார் என்பது தெரியவந்தது. உரிய முறையில் மின்சாரத்தை நிறுத்தி பணியை துவக்கியதாகவும், மற்ற அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின்சாரம் வழங்கியதே இவரின் மரணத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!