undefined

தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்.... மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்... பயணிகள் கடும் அவதி!

 

 
தமிழகத்தில் வங்கக்கடலில் நேற்று உருவான 'பெஞ்சல்' புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று  இரவுக்குள் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக சென்னை உட்பட  பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

பெஞ்சல் புயலை முன்னிட்டு, சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பல்லாவரம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயில்கள் பல்லாவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  2 மணி நேரம் வரை புறநகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். ஒரு சிலர் ரயிலை விட்டு இறங்கி நடந்து செல்லத் தொடங்கிவிட்டனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!