undefined

94 மின்சார ரயில்கள் ரத்து... இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க...!!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

சென்னையின் புறநகர் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பவை மின்சார ரயில்கள் இதன் மூலம் தான் தினசரி லட்சக்கணக்கானோர் பணி மற்றும் கல்விக்காக சென்னைக்கு வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக  இன்றும் நாளையும் 84 புறநகர் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் இடையே நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக இன்று இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை 12 மணி நேரம் ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில்  இயக்கப்படும்  10 மின்சார ரயில்கள் சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, அரக்கோணம், கடம்பத்தூர், திருவள்ளூர் மற்றும் திருத்தணி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.  

மின்சார ரயில்


அதன்படி இன்றிரவு 9.25, 10.25 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில், இரவு 10 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில், இரவு 10.20, 11.15 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இரவு 11.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில், இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர் மார்க்கெட் செல்லும் ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர் மார்க்கெட் வரும் ரயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து  செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு மூர் மார்கெட் செல்லும் மின்சார ரயில்களும், ஆவடியில் இருந்து காலை 3.50, 4.00, 4.25, 6.10, 6.45, 9.15 மணிக்கு புறப்பட்டு மூர் மார்கெட் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  காலை 4.10, 4.35, 6.00, 7.40, 7.55, 8.45 மணிக்கு ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களும், திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர் மார்கெட் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்களும், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!