நாளை முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையேறப் போகுது... இன்னைக்கே புக் பண்ணிடுங்க!

 
 

பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகவில்லை என்று ஒரு காலத்தில் டீசல் கார்களாக வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஏறக்குறைய டீசல் விலையும், பெட்ரோல் விலையும் சமமாக வர தொடங்கியிருக்கிறது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. இனி அந்த காலம் மீண்டும் எல்லாம் வராது. இப்போதைய தீர்வு மின்சார வாகனம் தான். பொல்யூஷன் கிடையாது. அதிகளவில் மெயிண்டனென்ஸ் கிடையாது. மின்சார் வாகனம் வாங்க நினைத்திருப்பவர்களுக்கு இது தான் சரியான தருணம். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய மானியம் தொடங்க உள்ளதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும் என கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், பிரபல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எலக்ட்டிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி அதை விற்பனையும் செய்து வருகிறது.

இதில் ஓலா நிறுவனம் தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கெனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்து விற்கப்படுகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய மானியம் தொடங்க உள்ளதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும் என கூறப்படுகிறது. 

இந்திய அரசால், அண்மையில் அறிவிக்கப்பட்ட Electric Mobility Promotion Scheme 2024 (EMPS) மூலம், எலக்ட்ரிக் பைக்குகளுக்கான ஆரம்ப கொள்முதல் விலை கணிசமாக உயரும் என்று முன்னணி தரமதிப்பீட்டு நிறுவனமான இந்திய முதலீட்டுத் தகவல் மற்றும் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட் (ICRA) தெரிவித்துள்ளது. அதாவது, பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பைக்குகளின் விலை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், மானியங்களைக் குறைக்கும். இது முந்தைய FAME 2 திட்டத்துடன் ஒப்பிடும் போது மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான செலவுகளை 10 சதவீதம் அதிகரிக்கும். இது மார்ச் 31 அன்று முடிவடைய இருப்பதால், அதன் பின்பு வாகனங்களின் விலை அதிகரிக்கப்படும். 

இந்திய அரசின் கனரக தொழில்கள் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024, ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை 4 மாத காலத்திற்கு மின்சார இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கு மொத்தம் ரூ. 500 கோடியை ஒதுக்குகிறது. இத்திட்டத்தின் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ. 10,000/kWhல் இருந்து ரூ. 5,000/kWh ஆக குறைக்கப்பட்டுள்ளது, ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 பலன் கிடைக்கும்.

எனினும், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட செலவில் மூன்றில் இரண்டு பங்கு ஆரம்ப கொள்முதல் செலவுகளை அதிகரிக்கும் என்று ICRA குறிப்பிடுகிறது. இதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும் என எதிர்பார்க்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்