undefined

வேகமெடுக்கும் தேர்தல் திருவிழா... இன்று கன்னியாகுமரி செல்கிறது திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு!

 

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்ட துவங்கியிருக்கிறது. நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட உள்ள நிலையில், இன்று கன்னியாகுமரி செல்கிறது திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு. இருமுறை தள்ளிப் போனாலும், நிறைவாக திமுக இளைஞரணி மாநாடு நடத்தி  முடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதே போன்று திருமாவும் மாநாடு நடத்தி முடித்து, தொண்டர்களை தேர்தலுக்கு உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில், பிற அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளை துவங்கியுள்ளனர். சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் கூட நேருக்கு நேராக சந்தித்துள்ளனர். எடப்பாடிக்கு எதிராக டிடிவியும் இவர்களுடன் கைகோர்க்க, புது ட்விஸ்டாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடப் போகிறோம் என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏற துவங்கியிருக்கிறார் ஓபிஎஸ். இன்னும் என்னவெல்லாம் பார்க்க போகிறார்களோ தமிழக மக்கள்?

சரி சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிடுவோம்... 

திமுக தேர்தல்  அறிக்கை தயாரிப்பு குழுவினர் தூத்துக்குடி சென்றிருக்கும் நிலையில், இன்று கன்னியாகுமரி செல்கிறார்கள். நீட் விலக்கு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, எய்ம்ஸ், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடுவது என  திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் முடித்து விட்ட நிலையில், மக்கள் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து, மக்களுக்கு வேறு என்ன குறைகள் இருக்கிறது... அதை தேர்தல் அறிக்கையில் சேர்த்து, எங்களுக்கு வோட்டு போட்டால், அந்த குறைகளையும் நிவர்த்தி செய்கிறோம் என தேர்தல் வாக்குறுதியில் சேர்ப்பதற்காக கருத்து கேட்க வருகிறார்கள். 

இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்க்கண்ட அட்டவணைப்படி பயணம் மேற்கொண்டு, தொழிற் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை பெறுவார்கள்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, நேற்று 5ம் தேதி தூத்துக்குடிக்கு வந்தனர். எம்.பி. கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர்.  இன்று பிப்ரவரி 6ம் தேதி கன்னியாகுமரி, 7-ம் தேதி மதுரை, 8-ம் தேதி தஞ்சாவூர், 9-ம் தேதி சேலம், 10-ம் தேதி கோவை, 11-ம் தேதி திருப்பூர், 16-ம் தேதி ஓசூர், 17-ம் தேதி வேலூர், 18-ம் தேதி ஆரணி, 20-ம் தேதி விழுப்புரம், 21,22,23 ஆகிய தேதிகளில் சென்னை, ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.

இந்த நகரங்களுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு வருவதற்கு முன்பாக, இக்குழு வருவதை உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதோடு, கோரிக்கை மனு பெறுவதற்கான இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க