undefined

தேர்தல் 2024: ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா?

 

இந்தியாவின் 18ஆம் மக்களவைக்கான தேர்தல் கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் மே 7ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், காங்கிரசின் 5 எம்எல்ஏ-க்கள், 2 எம்எல்சி-க்கள்ராஜினாமா செய்வதாக கட்சி மேலிடத்தை அச்சுறுத்தி வருகின்றனர்.


கர்நாடக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கே.எச்.முனியப்பாவின் உறவினருக்கு கோலார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த 5 எம்எல்ஏ-க்கள், 2 எம்எல்சி-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதில் ஒருவரான கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் எம்.சி. சுதாகர், மற்ற எம்எல்ஏ-க்கள் கே.எச்.முனியப்பாவின் குடும்பத்துக்கு அடிமையாக இருக்க முடியாது என கூறி வருவதாக தெரிவித்தார். மேலும், கே.எச்.முனியப்பாவின் குடும்பத்துக்கு தேர்தல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் எம்எல்ஏ-க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கட்சி மேலிடம் தங்கள் கருத்துகளைக் கேட்டதாகவும், ஆனால் தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டது. 17 பேர் அடங்கிய 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 21ம் தேதி வெளியானது. இதில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் மற்றும் ஐந்து அமைச்சர்களின் வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

கோலார் தொகுதியில் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என கே.எச்.முனியப்பா ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அந்த தொகுதியை சேர்ந்த ஒரு பிரிவு தலைவர்கள், முன்னாள் எம்.பி. எல்.ஹனுமந்தையாவுக்கு சீட் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்