தண்ணீர் வற்றிப்போன கிணற்றில் விழுந்த மூதாட்டி!

 

கடலூர் மாவட்டம், வானமாதேவி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி செல்வி (80). இந்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டு இடம் விட்டு இடம் அலைந்து திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவாளையம்- கடாரங்கொண்டான் சாலையில் அமைந்துள்ள கொடப்பேரி அருகே மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். வனத்தின் நடுவே தண்ணீர் இல்லாத 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், டிரைவர் குமரவேல், டெக்னீஷியன் பிரேமா ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரற்ற கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். கிணற்றில் விழுந்த மூதாட்டிக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் உதவியுடன் மூதாட்டியை பத்திரமாக மீட்ட டிரைவர் குமரவேல் டெக்னீஷியன் பிரேமாவை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!