undefined

 அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... மகள் கண் முன்னே பயங்கரம்!!

 

 தெலங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திராரெட்டி .  இவரின் பாதுகாப்பு அதிகாரி  பைசல் அலி. இவர்  இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்  மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைசல்அலி தனது குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இத்துடன்  லோன் ஆப் மூலமும் பல லட்சம் கடன் வாங்கியிருந்தார்.  கடன் கொடுத்தவர்கள்  இவரை வீடு தேடி சென்றும், அடிக்கடி போன் செய்தும் கடனை திருப்பி செலுத்தும்படியும் தொல்லை கொடுத்து வந்தனர்.  இதனால் பைசல்அலி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.  


இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அமைச்சரின் பாதுகாப்புக்கு பணிக்காக சீருடையில்  சென்றார். இவர் வீட்டிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கடன் காரர்கள்  பைசல்அலியின் வீட்டுக்கு சென்று  கடனை திருப்பி கேட்டனர். அவரது மனைவியும் மகளும் பைசல் அலி பணிக்கு சென்றுவிட்டதாகக் கூறினர்.   தந்தையை தேடி நிதி நிறுவனத்தினர் வந்தது குறித்து தெரிவிக்க அவரது மகள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றார். அந்த சமயத்தில் பைசல்அலி, அமைச்சரின் வீட்டருகே உள்ள டீ கடையில் தேநீர் குடித்து கொண்டிருந்தார்.  உடனே டீக்கடைக்கு வந்த பைசல் அலி மகள்   தனது தந்தையிடம் கடன்காரர்கள் காலையிலேயே வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வதாக கூறினார். ஏற்கனவே  கடும் மன உளைச்சலில் இருந்த   பைசல்அலி, எதிர்பாராத வகையில் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது மகள் மற்றும் பொதுமக்கள் கண்முன் தனது தலையில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.  

இதனை நேரில் பார்த்த அவரது மகள் மற்றும் டீக்கடைக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  அந்தப் பக்கமாக சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள்   துப்பாக்கி சத்தம் கேட்டு நாலாப்புறமும் சிதறி ஓடினர்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன்  அமைச்சர் சபிதா இந்திராரெட்டியும் சம்பவ இடத்துக்கு சென்று, நடந்ததை கேட்டறிந்தார்.  அவரது மகளுக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பைசல்அலி கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். தனது மகளின் கண்முன் யாரும் எதிர்பாராமல்   துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!