undefined

 அதிர்ச்சி... கோவையில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.42 கோடி பறிமுதல்!

 
 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்தி வந்த சோதனையில் ரூ.42 கோடி பறிமுதல் செய்தனர்.  

புல் மெஷின், லட்சுமி டூல்ஸ், ஆதித்யா பேப்பர் பிரைவேட் லிமிடெட்  ஆகிய நிறுவனங்களில் கடந்த 4 நாட்களாக ஐ.டி. ரெய்டு நடந்தது. தொழிலதிபர்கள் வரதராஜன், பொன்னுதுரை ஆகியோர் தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கணக்கில் வராத வருமானம் ரூ.100கோடிக்கு மேல் இருப்பதாக ஐ.டி. சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவையில் தொழிலதிபர்கள் வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களில் பாலசுப்ரமணியம் சேலம் அதிமுக பிரமுகர் இளங்கோவன் சம்பந்தி ஆவார். கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த தொழிலதிபர் பால சுப்பிரமணியம் ஈரோடு மாவட்டம் பவானியில் அஸ்வின் பேப்பர் மில்ஸ் என்ற பெயரில் பேப்பர் ஆலை நடத்தி வருகிறார். பவானியில் உள்ள பேப்பர் ஆலை மற்றும் கோவை சிவானந்தா காலனியில் உள்ள அஸ்வின் பேப்பர் ஆலை அலுவலகம் மற்றும் அவரது பங்களாவில் வரு மானவரித்துறை அதிகாரி கள் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை சிவானந்தா காலனியில் உள்ள அஸ்வின் பேப்பர் அலுவல கம் மற்றும் பங்களாவுக்கு நேற்று 5 இன்னோவா கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இதே போன்று கோவையைச் சேர்ந்த லட்சுமி டூல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வரதராஜனுக்கு தொடர்புடைய இடங்கள். இவரது மகன்கள் பொன்னுத்துரை. பார்த்திபன், செந்தில்குமார் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் வரத ராஜன் தொடர்புடைய இடங்களான, துடியலூர், ராவுத்தர் பிரிவு, சிவானந்த காலனியில் தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக நேற்று சோதனை நடத்தினர்.

கவுண்டம்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநா யக்கன்பட்டி, சிந்தாமணி புதூர், காங்கேயம்பாளை யம் புரெபல் நிறுவனம் உள்ளிட்ட 11 இடங்களில் இந்த சோதனை நடந்தது. நேற்று 4வது நாளாக சோதனை நீடித்தது. இதில், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், தணிக்கை ஆவணங்கள், பில் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவையில் வருமான வரித்துறை சோதனையில் இது வரையில் ரூ.42 கோடி பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!