undefined

 அடுத்தடுத்து பற்றி எரிந்த ஈ பைக்குகள்... ஒரே நாளில் அதிர்ச்சி!

 

 தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில்  வெள்ளியணை பகுதியில் வசித்து வருபவர்  தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவர் பேட்டரியால் இயங்கக் கூடிய ஓலா எலக்ட்ரிக்கல் இருசக்கர வாகனத்தை 6 மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். அதில் தான் தினமும் அலுவலகம் சென்று வந்துள்ளார். இன்றும் வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு சேலம் பை - பாஸ் சாலையில் திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து குபுகுபுவென புகை வந்தது.  

தினேஷ் இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து  இருசக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். உடனடியாக கீழே இறங்கி  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில்  தீயணைப்பு துறையினர் வந்து சேர்வதற்குள் ஓலா இரு சக்கர வாகனம் முழுவதுமாக கருகி சாம்பலானது.  இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எரிந்த ஓலா இரு சக்கர வாகனத்தின் மதிப்பு ரூ1,47,000  என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.இதேபோல் மதுரை தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்த  ஓலா இ.பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மதுரை திருமங்கலம் பகுதியில் வசித்து வருபவர்  கனகராஜ் இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை கனகராஜ் அலுவலக பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான திருமங்கலத்திற்கு நாகமலை புதுக்கோட்டையில் இருந்து  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென  அவர் ஓட்டி வந்த ஒலா இ.பைக்கிலிருந்து  குபுகுபுவென புகை வெளியாகி உள்ளது. இதை பார்த்த கனகராஜ் தனது இரு சக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார்.  தீப்பிடிக்க தொடங்கி மளமளவென  தீப்பிடித்து இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது.  ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட இச்சம்பவங்களால் மின்சார வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!