அதிர்ச்சி... பெருவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை!   

 
 தென் அமெரிக்க நாடான பெருவில்  7.2 ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், மிகப்பெரிய கட்டடங்கள் குலுங்கின.  


பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில்  தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  பெருவியன் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள அட்டிகிபாவிற்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பெருவின் கடற்கரையை 3 மீட்டர்  வரை அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில், ஹைட்ரோகிராபி மற்றும் நேவிகேஷன் இயக்குநரகத்தின் தலைவர், குஸ்டாவோ கோர்டோவா, உள்ளூர் நெட்வொர்க் பக்ஸ்ட்ரெப் ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!