கிருஷ்ணகிரியில் நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!

 

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து வெளியிட்ட செய்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் அடுத்த அஞ்செட்டியில்   லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி  சம்பங்கி மார்தொட்டி, முனியப்பன் கோவில் உட்பட பல  இடங்களில்  லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.9ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.   மக்கள் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்டகலெக்டர் இந்த நிலநடுக்கம் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி   வனப்பகுயில், லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார்   5 கி.மீ., ஆழத்தில்  ஏற்பட்டுள்ளது என   பேரிடர் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதியில் நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.  லேசான நில அதிர்வு என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் நில அதிர்வையாரும் உணர முடியவில்லை. இது குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.  
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க