undefined

மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்.. அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!

 

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், “மாநிலத்தின் அமராவதியில் இன்று பிற்பகல் 1.37க்கு ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மிதமான நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏதும் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்று அமராவதி மாவட்ட துணை ஆட்சியர் அனில் பட்கர் தெரிவித்தார்.

சிக்கல்தாரா, கட்கும்ப், சுர்னி, பச்டோங்ரி தாலுகாக்கள் மற்றும் மேல்காட் பகுதியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் அந்த பகுதிகளில் மக்கள் அலறியடித்தப்படி தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.

மாவட்டத்தின் பரத்வாடா நகரின் சில பகுதிகளிலும், அகோட் பகுதிகளில் உள்ள தர்னியிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை