undefined

ரஜினிகாந்த் பேரன் வீர் ரஜினிகாந்த்திற்கு காதணி விழா..!!

 

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபர் விசாகனை 2வது திருமணம் செய்து கொண்டார்.  செளந்தர்யாவுக்கும் ஆண் குழந்தை பிறந்து அதற்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் வைத்திருந்தனர். விசாகனை  2வதாக திருமணம் செய்துக் கொண்ட செளந்தர்யா ரஜினிகாந்துக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செந்தோட்டம் மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடந்தது. இந்த கோயிலில் வைத்து ரஜினியின் பேரன் வீர் ரஜினிகாந்திற்கு மொட்டை போட்டுள்ளனர். இதில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த்   விமானம் மூலம் கோவைக்கு பறந்து சென்றார்.  

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பிறந்த குழந்தைகளுக்கும் ரஜினிகாந்த்துக்கு பிடித்ததை போல யாத்ரா மற்றும் லிங்கா  பெயர்களே சூட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், தாத்தாவின் பெயரை தனது மகனுக்கு சூட்ட வேண்டும் என நினைத்த செளந்தர்யா ரஜினிகாந்த் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்கிற பெயரையே தனது மகனுக்கு சூட்டியுள்ளார்.  ரஜினிகாந்த் வீட்டில் ஒரு குட்டி ரஜினி வந்து விட்டாரா என ரசிகர்கள் அந்த குழந்தையை வாழ்த்தி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை