குடிபோதையில் அரசு ஓட்டுநர் அலட்சியம்.. பேருந்துகளுக்கு இடையில் சிக்கி இளைஞர் பரிதாப பலி!

 

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் காந்திபுரம் நகர பேருந்து நிலையமும் ஒன்று. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், காந்திபுரம் - காந்தி பூங்கா இடையே இயக்கப்படும் மூன்று தனியார் பேருந்துகள் இன்று (புதன்கிழமை) காலை புறப்பட தயாராக இருந்தன.

அப்போது, பேருந்தை ஓட்டி வந்த கண்டக்டர் திடீரென பேருந்தை பின்னோக்கி நகர்த்தினார். அப்போது பின்னால் வந்த பேருந்தை கடக்க முயன்ற நபர் இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், விபத்தை ஏற்படுத்திய நபரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கோவை வண்டிப்புதூரை சேர்ந்த திருநாவுக்கரசர் என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 279, 304 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர் நீலகிரி மாவட்டம் தெங்கு மரஹாடா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!