ரூ.86 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. மியான்மரை சேர்ந்த இருவர் அதிரடியாக கைது!
மிசோரம் மாநிலம் சம்பா மாவட்டத்தில் மாநில காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ரூ. 86 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மியான்மரை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள தியோ நதிக்கரையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சியை போலீசார் முறியடித்தனர். கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில், 28.52 கிலோ போதை மாத்திரைகள் ரூ. 85.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் போதைப் பொருள் கடத்த முயன்ற ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் மியான்மரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.39 லட்சம் மதிப்புள்ள 52 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!