6 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. லாரியில் கடத்தி வந்த 6 பேர் கைது!
தஞ்சாவூர் ஒரத்தநாடு தென்னமாடு பிரதான சாலையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் 6 பேர் கொண்ட கடத்தல் கும்பலை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் ஒரத்தநாடு டிஎஸ்பி ஷனாஸ் இலியாஸ் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 17) இரவு ஒரத்தநாடு தென்னமாடு புறவழிச்சாலையில் இந்த தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.காரை சோதனையிட்டபோது, பின்னால் வந்த லாரி ஒன்று நிற்காமல் அந்த வழியாக செல்ல முயன்றது. லாரியை பிடித்து சோதனையிட்டனர் போலீசார். அப்போது லாரியில் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 1,100 கிலோ அரசு தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் காரில் வந்தவர்கள் லாரியில் போதை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிராஜுதீன் (35), அப்துல் வஹாப் (38), அப்துல் ரஹீம் (29), ராஷ்த் (43), சர்புதீன் (45), ராஜா ஃபக்ருதீன் (40) என்பதும், அவர்கள் பட்டுக்கோட்டை என்பதும் தெரியவந்தது. மேலும் போதை பொருட்களை யாரிடம் வாங்கினார்கள், யாருக்கு விற்பனைக்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து ஒரத்தநாடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!