undefined

 “போதை மருத்து கொடுத்து பலாத்காரம் செய்தார்...” 'ப்ரோ டாடி' உதவி இயக்குனர் மீது துணை நடிகை புகார்!

 
 

கேரளத்தில் ஹேமா கமிஷன் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நடிகைகள், துணை நடிகைகள், பாடகிகள் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ‘ப்ரோ டாடி’ படத்தின் உதவி இயக்குனர் மன்சூர் ரஷீத் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கொல்லத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய சிபிஎம் தலைவரால் பாதுகாக்கப்பட்டு வரும் உதவி இயக்குநர் மன்சூர் தனது குடும்ப வாழ்க்கையை சீரழித்ததாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். 

அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர், ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மன்சூர் போதை மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளின் தீவிரம் இருந்தபோதிலும், மன்சூர் கலாபனா மேற்கு சிபிஎம் உள்ளூர் கமிட்டி உறுப்பினரான ஜே குன்ஹி சாந்துவிடமிருந்து தொடர்ந்து பாதுகாப்பைப் பெற்றார் என்றும், மன்சூர் மீதான புகார் இருந்த போதிலும் எம்புரான் படத்தில் அவர் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் பாலியல் புகார் பரபரப்பானதும் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்று அந்தப் பெண் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். 

தயாரிப்புக் குழு தனது ஹோட்டல் அறை மற்றும் விமான டிக்கெட்டை MakeMyTrip மூலம் பதிவு செய்ததற்கான ஆதாரத்தையும் அந்தப் பெண் அளித்துள்ளார். ஹைதராபாத்தில் காவல் நிலையத்தில் இது குறித்து தான் உடனடியாக புகார் அளித்த பிறகு, போலீசார் விசாரணையின் ஒரு பகுதியாக ஹோட்டலில் இருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்ததாகவும், திருவனந்தபுரம் ரேஞ்ச் டிஐஜி அஜிதா பேகம் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) முறைப்படி புகார் அளிக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிபிஎம் தலைமையிடம் இது குறித்து பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பெண் குற்றம் சாட்டினார். 

கடந்த 2021ல் கலாச்சாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் மற்றும் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே வரதராஜன் ஆகியோரை இது குறித்து தான் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறிய அவர், உள்ளூர் கட்சித் தலைவர்களால் தனக்கும் தன் மகனுக்கும் எதிராக தீங்கிழைக்கும் பிரச்சாரம் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மன்சூரைத் தேடி ஹைதராபாத் போலீசார் கேரளாவிற்கு வந்த போது மன்சூர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது, தற்போது ஐதராபாத்தில் வசிக்கும் அந்த பெண், உயிருக்கு பயந்து வாழ்வதாக கூறியுள்ளார். ஐதராபாத்தில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட துன்புறுத்தல் வழக்கின் விவரங்கள் அடங்கிய பெண்ணின் முறையான புகாரை எஸ்ஐடி இன்று மின்னஞ்சல் மூலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை