பிரபல கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை.. பிரபல ரவுடி அதிரடியாக கைது!
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையாகி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில், தாம்பரம், பள்ளிக்கரணை துணை கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, பொத்தேரி தனியார் பல்கலையை சுற்றியுள்ள, 500க்கும் மேற்பட்ட விடுதிகள் மற்றும் வீடுகளில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 19 மாணவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து அரை கிலோ கஞ்சா, 6 சாக்லேட்கள், 20 மில்லி கஞ்சா எண்ணெய், 5 போங்க்ஸ், புகை பிடிக்கும் பாத்திரம், 7 ஹூக்காக்கள், 6 ஹூக்கா பவுடர்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிடிபட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏபிளஸ் பிரிவு ரவுடியான செல்வமணி (29) என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தொடர்ந்து விநியோகிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கியிருந்த நந்திவரத்தை சேர்ந்த ரவுடி செல்வமணியை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் நான்கு பட்டா கத்திகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைதான செல்வமணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட தனியார் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!