undefined

குற்றாலத்தில் ஆகஸ்ட் மாதம் சாரல் விழா; நன்கொடை வழங்க ஆட்சியர் வேண்டுகோள்!

 

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். இந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மலைப்பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அருவிகள், மலையில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும்.


சாரல் சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் சாரல் திருவிழா சமயங்களில் குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் உண்டு. இந்நிலையில், கடந்தாண்டு சாரல் விழா நடத்தாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் விடுத்துள்ள அறிவிப்பில், “குற்றாலத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  சாரல் திருவிழா நடைபெற உள்ளது. சாரல் விழாவை செம்மையாக நடத்த வணிக நிறுவனங்கள், தொழில் அதிபர்கள்  மற்றும் நன்கொடையாளர்கள் பொது நலன் கருதி  நன்கொடையை  வாரி வழங்க  கேட்டுக் கொள்ளப்படுகிறது.


நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் பாரமரிக்கப்படும் ஐசிஐசிஐ பேங்க் தென்காசி வங்கிக்கிளை கணக்கு எண் 612901096404, IFSC CODE ICICI0006129-ல் செலுத்தலாம். நன்கொடையை வரைவோலையாகவோ அல்லது  காசோலையாகவோ வழங்கலாம். நன்கொடையாளர்கள் வழங்கும் தொகைக்கேற்ப அதாவது, ஒரு லட்சத்துக்கு மேல் வழங்குவோருக்கு சில்வர் மதிப்பீடும்,  ரூ.5 லட்சத்துக்கு மேல் வழங்குவோருக்கு கோல்டு  மதிப்பீடும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வழங்குவோருக்கு பிளாட்டினம் மதிப்பீடும் வழங்கப்படும்.
இதன் மூலம்  வழங்கும் தொகைக்கு ஏற்றார் போல நிறுவனத்தின் பெயர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்  தொகுத்து வழங்கும் போது அறிவிக்கப்படும். சாரல் திருவிழா நடைபெறும் நாட்களில் அமைக்கப்படும் கடைகளில், அரங்குகளில், நிறுவனத்தின் பெயர் விளம்பரப்படுத்தப்படும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலரை (பொறுப்பு) 9442227412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!