தென்காசியில் பரபரப்பு... மகனை பெற்றோர்களே கொலைச் செய்த கொடூரம்!
மது போதைக்கு அடிமையாகி, தினமும் குடித்து விட்டு வந்து தொல்லைக் கொடுத்த 25 வயதுடைய மகனை, பெற்றோரே கழுத்தை நெரித்து கொலைச் செய்த சம்பவம் தென்காசி, செங்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வசித்து வந்த முகமது சித்திக் எனும் 26 வயதுடைய இளைஞர் தினமும் குடித்து விட்டு, தனது குடும்பத்தினரிடையே ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மகனைத் திருத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், மனம் வெறுத்துப்போன தாய் தந்தை ஒரு கட்டத்தில் தங்களது மகனை அடித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி, தங்களது மகனைக் கொலை செய்து விட்டு, மகன் முகமது சித்திக் தற்கொலை செய்து கொண்டதாக கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து நாடகமாடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், முகமது சித்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், முகமது சித்திக்கின் கழுத்தில் கண்டறியப்பட்ட காயம் மூலம் உண்மை தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெற்ற மகனை, பெற்றோரே கழுத்தை நெரித்துக் கொலைச் செய்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!