‘திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்றுதான்...’ சீமானை எதிர்க்கும் சத்யராஜ்
திராடவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று தான். தமிழ் தேசியம் ஆரியத்தைத் தான் எதிர்க்க வேண்டுமே தவிர திராவிடத்தை எதிர்க்க கூடாது’ என்று நடிகர் சத்யராஜ் சென்னையில் கருத்தரங்கம் ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் ‘திராவிடமே தமிழர் அரண்’ என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருதரங்கத்தை தலைமையேற்று பேசிய சத்யராஜ், “தமிழ் தேசியம் ஆரியத்தைத் தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை எதிர்க்க கூடாது. ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் குடுத்தது திராவிட இயக்கங்கள் தான். திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்று தான் என மேதகு பிரபாகரனே கூறியுள்ளார்.
விஜய் கட்சி துவங்கி, மாநாட்டில் கொள்கைகளை அறிவிக்கும் முன்பு வரை விஜய்யை ஆதரித்து, என் தம்பி நிச்சயம் வெல்வான் என்று கூறி வந்த சீமான், தவெக கொள்கையில் திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று கூறியதும் எதிர்ப்பு தெரிவித்து, தனக்கு அதில் உடன்பாடில்லை என்று கொந்தளித்தார்.
சீமானுக்கும், விஜய்க்கும் திராவிடமும், தமிழ் தேசியமும் குறித்த கருத்துமுரண்பாடு காரணமாக வரும் தேர்தலில் இவர்களின் கூட்டணி கேள்விக்குறியாகி இருக்கிறது. இவை இரண்டும் ஒரு காலத்திலும் ஒன்றாக முடியாது என்று சீமான் கூறி வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் சீமான் கருத்தை நிரகாரித்து, இவை இரண்டும் ஒன்று தான் என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!