புதன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் | யாராலும் தடுத்து நிறுத்த முடியாது!
நவக்கிரகங்களில் மிக குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். இவரது இடமாற்றத்தால் அனைத்து ராசிகளும்ம் குறிப்பிட்ட பலன்களை ஆதாயமாகவோ , அனுபவமாகவோ பெறுவார்கள். புதபகவானின் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதன் பகவான் பொதுவாக புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி இவைகளுக்கு காரணகர்த்தா. தற்போது புதன் தனது சொந்தமான ராசிக்கான கன்னி ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார்.
அக்டோபர் மாதத்தில் 2 முறை புதன் தனது இடத்தை மாற்ற உள்ளார். அதன்படி அக்டோபர் 10ம் தேதி புதன் துலாம் ராசிக்கும், அக்டோபர் 29ம் தேதி விருச்சிக ராசிக்கும் செல்கிறார். ஒரே மாதத்தில் புதன் பகவான் 2 முறை இடமாற்றம் செய்வது கட்டாயம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப் போகின்றன.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களே புதன் பகவானின் இடமாற்றத்தால் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். பல நன்மைகள் தேடி வரும். திடீர் பணவரவு இருக்கும். சுபகாரியம் கைகூடும். அதிர்ஷ்டத்தால் ஆதரவால் பல நன்மைகளை பெறப் போகிறீர்கள்.
விருச்சிக ராசி
புதன் பகவானின் இடமாற்றத்தால் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். அக்டோபர் மாதத்தில் பணம் பல வழிகளில் வந்து சேரும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். வீடு தேடி வரும் வாய்ப்புகளால் நன்மைகளை கிடைக்கப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
தொழிலில் முன்னேற்றம் பெறலாம். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் பெருகும். இதுவரை சரியான வேலை அமையவில்லையே என காத்துக் கிடந்தவர்கள் நல்ல வாய்ப்புக்களால் தேடிய பணியை பெறலாம். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மகர ராசி
புதன் பகவானின் இடமாற்றத்தால் சிறப்பான பலன்களை பெறப் போகிறீர்கள். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்பின் மூலம் பலன்கள் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!