undefined

மறந்துடாதீங்க... தமிழகம் முழுவதும் அக்.31க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி!

 

மறந்துடாதீங்க... என்னைக்கு இருந்தாலும் உங்க வீட்டிற்கு நீங்கள் சொத்து வரி கட்டித் தான் ஆக வேண்டும். அப்படி கட்டப் போகின்ற சொத்து வரியை அக்டோபர் 31ம் தேதிக்குள் மாநகராட்சி அலுவலகங்களில் செலுத்தினால், சொத்து வரி தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்துவதில் சலுகை அறிவித்துள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதுமே அக்டோபர் 31க்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்த வேண்டும்.

இதுவரை செலுத்தாதவர்கள் இம்மாத இறுதிக்குள் (31.10.2024 ) செலுத்தி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுமாறும் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே நடைமுறையில் இருக்கிறது. அதனால் உடனே நீங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்திடுங்க.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!