“ஹேமா கமிஷன் பற்றி என்கிட்டே கேட்காதீங்க...” எஸ்கேப் ஆன நடிகை ஆண்ட்ரியா!
தமிழகத்தில் இன்று காலை சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடைகளுக்கான பிரத்யேக கடைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா , கடையைத் திறந்து வைத்து பேசினார்.அப்போது, "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன். இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று. இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது. ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்" என்றார்.
நடிகை ஆண்ட்ரியா பேசி முடித்த பின்னர், ஆண்ட்ரியாவிடம் ஒரு நிருபர் ஹேமா கமிஷன் பற்றியும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு "அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்" என்று கூறி விட்டு, ஹேமா கமிஷன் குறித்தும், திரையுலகில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்தும் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து விட்டார்.
எப்போதும் துணிச்சலாக கேள்விகளை எதிர்கொள்ளும் நடிகை ஆண்ட்ரியா, பெண்களின் பிரச்சனைகளை சக நடிகையே பேசாதிருப்பது நிருபர்களை ஆச்சர்யப்பட வைத்தது. மலையாளத்தில் நடிகைகள் தைரியமாக ஒன்று சேர்ந்து மலையாள திரையுலகைத் திருத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். தமிழில் நடிகைகள் ஒன்று சேர்வது கடினம் என்று கூறியபடி அங்கிருந்து நிருபர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!