undefined

பிரதமர் மோடியை கௌரவித்த டொமினிகா அரசு.. நாட்டின் உயரிய விருது அறிவிப்பு!

 

அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கரோனா தொற்றுநோய்களின் போது மருந்துகளை வழங்கி இந்தியா உதவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் அந்த நாடுகளுக்கு டன் கணக்கில் மருந்துகளை அனுப்பியதன் மூலம் இந்தியா உதவிக்கரம் நீட்டியது. இதற்காகவும், டொமினிகாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக, பிரதமர் மோடியை கவுரவிக்க டொமினிகா அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி நாட்டின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கயானாவில் உள்ள ஜார்ஜ்டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு டொமினிகா காமன்வெல்த் தலைவர் சில்வானி பர்தான் விருது வழங்கி கவுரவிக்கிறார்.

பிப்ரவரி 2021 இல், கொரோனா தடுப்புக்காக இந்தியா 70,000 அஸ்ட்ராஜெனெகாவை டொமினிகாவுக்கு வழங்கியது. இவ்வாறு, டொமினிகா சக கரீபியன் நாடுகளுக்கு ஆதரவைப் பெற்றுக்கொடுத்தது. பிரதமர் மோடியின் தலைமையில் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் டொமினிகாவுக்கு இந்தியா அளித்த ஆதரவை இந்த விருது அங்கீகரிக்கிறது. இதேபோல், டொமினிகா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிரதமர் மோடி அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருது இருக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் தெரிவித்தார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!