வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி இல்லை!

 

 தமிழகம் முழுவதும் தனிநபர் வாகனங்களில்  ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் முதல் படியாக   காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டி உள்ள வாகனங்களை நிறுத்தி சோதனையிடப்பட்டது. அதில் சிக்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது   வாகன நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று  காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.    ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளலாம். ஆனால் அரசு அங்கீகாரம் செய்த அந்த செய்தி நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். யூ டியூபர்ஸ் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மருத்துவர்கள் இதில் தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்  தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால்  பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்ளும் போது உருவாகும் சிரமங்களை தவிர்க்கலாம் என விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது.   இது குறித்து உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஆம்புலன்ஸ் உட்பட  அவசர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு  விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது.   சென்னை உயர்நீதிமன்றம் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!