பெற்றோர்களே உஷார்... குழந்தைகளுக்கு இந்த இருமல் மருந்துகளை கொடுக்காதீங்க... மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை!  

 

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பொதுவாகவே காய்ச்சல் சளி இருமல் என்றால் வீட்டிலேயே பெற்றோர் சுய மருத்துவம் பார்த்துவிடுவதுண்டு. அதிலும் இருமல் என்றால் அருகில் இருக்கும் மருந்தகங்களில் ஏதாவது ஒரு இருமல் மருந்தை வாங்கி கொடுத்துவிடும் வழக்கம் இருந்து வருகிறது.

 ஆனால் இந்த மருந்துகளில் நச்சுப் பொருட்கள் அதிகம் உள்ளதாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களின் இருமல் மருந்துகள் தர சோதனையில் தோல்வி அடைந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.  

பல வகையான இருமல் டானிக்குகளில் டைதிலீன் கிளைகோல், PEHB மற்றும் எத்தில் கிளைகோல் ஆகியவை சரியான வரம்புகளுக்குள் இல்லை. மொத்தம் 7,087 மருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 353 மருந்துகள் சோதனையில் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே மருத்துவரிடம் பரிந்துரைத்த பிறகு குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள் .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!