நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக நகராட்சி தலைவர் மாரடைப்பால் மரணம்!

 

நேற்று குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 55. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், நகர்மன்ற தலைவராக ஷீலா கேத்தரின் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் நகர் மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் பங்கேற்று விட்டு மதியம் உணவுக்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நகர்மன்ற தலைவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குன்னூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க