திமுக எம்எல்ஏ., முதல்வர் ஸ்டாலினிடம் புகார்களை அடுக்கிய திமுக நிர்வாகி!
தன் சொந்த இடத்தை ஆக்கிரப்பு செய்து ரேஷன் கடை கட்டுவதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் டிஜிபியிடம் திமுக நிர்வாகி புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பூரைச் சேர்ந்த சோலையப்பன் என்பவரது மகன் எஸ்.எஸ்.ரவி. தற்போது திமுகவில் புதூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர், தனக்கும், தன்னுடைய சகோதர - சகோதரிகள் என 6 பேருக்கும் வெம்பூரில் சொந்தமாக 49 சென்ட் இடம் உள்ளது. விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் என் மீது உள்ள விரோதத்தால் ஆக்கிரமிப்பு செய்து எனக்கு தெரியாமலேயே அங்கு ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை செய்து தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சர்வாதிகாரியாக செயல்படும் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய சொந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது திமுக நிர்வாகியே புகார் அளித்த சம்பவம் விளாத்திகுளம் தொகுதி திமுக கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, தங்களுடைய நிலத்தில் பூமி பூஜை செய்தது முறையா? என்று விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், புதூர் திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ரவி செல்போனில் கேட்ட ஆடியோ ஒன்றையும் ரவி வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!