தேமுதிக நிர்வாகி மரணம்... கல்வி செலவை ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவிப்பு!
Aug 26, 2024, 17:51 IST
நேற்று தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் கட்சி கொடியைக் கட்டுவதற்காக கொடிகம்பம் நட முயன்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வெங்கடேசனை காப்பாற்ற முயன்ற மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த தேமுதிக பிரமுகர் வெங்கடேசனின் 2 மகன்களின் முழு கல்வி செலவுகளையும் ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!