தீபாவளி சிறப்பு ரயில்... 10 நிமிஷத்துல மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது!
தீபாவளியையொட்டி பலரும் சொந்த ஊரில் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டு வரும் நிலையில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இந்த ரயிலின் முன்பதிவு தொடங்கிய நிலையில், அடுத்த 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முழுவதும் விற்று தீர்ந்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் பயணத்திற்கான ரயில் முன்பதிவு கடந்த ஜூன் 30ம் தேதியில் இருந்து தொடங்கியது. அக்டோபர் 28ம் தேதி செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு கடந்த ஜூன் 30ம் தேதியும், அக்.29 செல்லும் ரயில்களுக்கு ஜூலை 1ம் தேதியும், அக்.30ம் தேதி செல்லும் ரயில்களுக்கு ஜூலை 2ம் தேதியும், அக்.31 செல்லும் ரயில்களுக்கு ஜூலை 3ம் தேதியும் முன்பதிவு தொடங்கியது.
இந்த ரயில்களிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்த நிலையில், பலரும் செய்வதறியாது திகைத்தனர்.
இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்கான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டது பெரும் ஆறுதலாக இருந்த நிலையில், பலரும் இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அவைகளிலும் அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த 10 நிமிடங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்தன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 29ம் தேதியும், நவம்பர் 5ம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 06001) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!