undefined

தீபாவளி சீட்டு மோசடி.. ரூ.3 கோடிக்கு மேல் அபேஸ்.. தலைமறைவான பாஜக நிர்வாகிக்கு வலைவீச்சு!

 

திருப்பூர் ஊத்துக்குளி சாலை மண்ணரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் கடந்த 4 ஆண்டுகளாக கருமாரம்பாளையம் பாஜக கிளை அலுவலகத்தில் திருப்பூர், ஈரோடு பகுதி மக்களுக்கு ஏலம் மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளார்.

தீபாவளி சீட்டு முடிவடைந்து பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்படும்போது, ​​பாஜக அலுவலகத்தில் இருந்த கட்சிக் கொடி மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை கிழித்துவிட்டு அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் கருமாரம்பாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மறியலை கைவிட்ட பொதுமக்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான செந்தில்குமார் பாஜகவில் இல்லை என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!