undefined

விவாகரத்து சர்ச்சை:  அவதூறு பரப்பிய யூடியூபர்களுக்கு நோட்டீஸ்... ஆக்‌ஷனில் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் !

 

  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1995ல்  சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன்.இதில்  மூத்த மகள் கதீஜாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் தனது தந்தையை போல் இசைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா தம்பதியினர் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.  இந்த அறிவிப்பு  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.  ரஹ்மான் விவாகரத்து குறித்து  சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன.  இதனை  உடனடியாக நீக்க வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், சமூக வலைதளங்களில்  அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகள் போன்ற அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த அவதூறு கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!