undefined

விவாகரத்து வழக்கு... நடிகர் ஜெயம்ரவி - ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜர்!

 

தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி விண்ணப்பித்திருந்த வழக்கில் நேற்று நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜரானார்கள். 

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியைக் காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் நேரில் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!