undefined

234 தொகுதிகள்... 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்பாளர்கள்... வேகமெடுக்கும் விஜய் கட்சி!

 

 

முடிவு பண்ணி இறங்கிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று முழு வீச்சில் களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். மொத்தமுள்ள 234 தொகுதிகளையும் 100 மாவட்டங்களாகப் பிரித்து, 100 பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றாலும் பொறுப்பாளர்கள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை என நடிகர் விஜய் தனது ஹை ஸ்பீடு அரசியலை இப்போதே தொடங்கி இருக்கிறார்.நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் உற்று நோக்கப்படுகிறது. சமீபத்தில் பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அதில் பல்வேறு ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப்பட்டது.2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் எனவும் மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முடிவு ஹைலைட்டாக அமைந்தது. தற்போது தமிழகத்தை நிர்வாக வசதிக்காக கட்சி ரீதியில் 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.


புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த பத்து நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் நியமனத்திற்குப் பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழக்கத்தின் அடுத்தடுத்த பரபர செயல்பாடுகள் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளி இருப்பதுடன் பிற அரசியல் கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!