இந்தியாவுக்கு அவமரியாதை… பங்களாதேஷில் இந்திய தேசிய கொடியை மிதித்து செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்... குவியும் கண்டனங்கள் !
பங்களாதேஷில் உள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET), டாக்கா பல்கலைக்கழகம் (கனிட் பவன்) மற்றும் நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களின் முக்கிய வாசல்களில் இந்திய தேசிய கொடியை மாணவர்கள் மிதித்து செல்வதைப் போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பையும், கண்டனங்களையும் குவித்து வருகின்றன.
பங்களாதேஷின் முக்கிய பல்கலைக்கழகங்களில் நடந்த இந்த சம்பவங்கள், இந்தியாவின் தேசிய சின்னத்திற்கு அப்பட்டமான அவமரியாதை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிறுவனங்களின் வாயில்களில் வேண்டுமென்றே இந்திய தேசிய கொடியை மிதிப்பது போன்று வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியான நிலையில், இது இந்தியா முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டி கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
பங்களாதேஷ் மாணவர்களால் இந்தியக் கொடி மிதிக்கப்படும் அதிர்ச்சியூட்டும் படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்திய குடிமக்கள் மற்றும் பொது நபர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளன.
BUET பல்கலைக்கழகத்தில், நுழைவாயிலில் இந்திய தேசியகொடி வர்ணம் பூசப்பட்டதைக் காண முடிந்தது. மேலும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தபோது அதை மிதித்ததில் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் பதிவாகியுள்ளது. இதேபோல், டாக்கா பல்கலைக்கழகத்தில், கனிட் பவன் நுழைவு வாயிலில் இந்திய தேசிய கொடி மிதிபடுவது போல வைக்கப்பட்டதால், அவ்வழியாக சென்ற அனைவரும், இந்திய தேசிய கொடியை மிதித்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த அவமரியாதை செயல் கோபத்தை தூண்டியுள்ளது. பல சமூக ஊடக பயனர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய குடிமக்களின் அழைப்புகள் உட்பட பல ட்வீட்கள், இந்திய பல்கலைக்கழகங்களில் இருந்து பங்களாதேஷ் மாணவர்களை இந்திய அரசாங்கம் நாடு கடத்த வேண்டும் என்று கோரியுள்ளன.
"வங்காளதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வாயிலில் இந்தியக் கொடி வரையப்பட்டுள்ளது. இது இந்தியாவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும்" என்று X ல் ஒரு பயனர் கூறியுள்ளார்.
மற்றொரு ஆத்திரமடைந்த பயனர், "பங்களாதேஷ் முஸ்லிம்கள் இந்தியாவையும் இந்துக்களையும் வெறுக்கிறார்கள். கல்வி அமைச்சகம் அனைத்து முஸ்லிம் பங்களாதேஷ் மாணவர்களையும் பங்களாதேஷிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். டெல்லி மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் 1000 பங்களாதேஷ் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
"வங்காளதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பங்களாதேஷில் உள்ள பிற வளாகங்களின் நடைபாதையில் இந்திய தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்டுள்ளன அல்லது மிதியடியைப் போன்று கட்டாயமாக மிதித்து நுழைவதைப் போல வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றை மறந்தோ அல்லது அவமதிக்கும் வகையில் கொடிகளின் மீது நடக்கின்றனர். இத்தகைய நடத்தை ஒரு தேசத்தின் மீதான வெறுப்பின் அளவைக் காட்டுகிறது. 1971ல் வங்காளதேசம் உருவாவதற்கு முக்கிய காரணமான பங்களாதேஷ் விடுதலைப் போரில் இந்திய இராணுவம் தலையிடுவதற்கு முன், இனப்படுகொலையும், கற்பழிப்பு சம்பவங்களும் வரலாற்றின் மிக மோசமான உதாரணங்களில் ஒன்றாகும்" என்று ஆஸ்திரேலிய ஊடகம் இது குறித்து எழுதியுள்ளது.
இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், குறிப்பாக வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த பிறகு இந்த பிரச்சினை அடுத்த அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இஸ்கான் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த சீற்றம் ஏற்பட்டுள்ளது.
தாஸ் மற்றும் 18 பேர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பேரணியின் போது வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் முழுவதும், குறிப்பாக டாக்கா மற்றும் சட்டோகிராமில் போராட்டங்கள் வெடித்தன.
"சிறுபான்மையினர் உட்பட வங்காளதேசத்தின் அனைத்து குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முதன்மைப் பொறுப்பு வங்காளதேச அரசாங்கத்திடம் உள்ளது" என்று ஜெய்சங்கர் கூறினார், டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அந்நாட்டில் சிறுபான்மையினர் தொடர்பான நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
"தீவிரவாத பேச்சுக்களின் எழுச்சி, அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த முன்னேற்றங்களை ஊடகங்கள் மிகைப்படுத்தியதாக மட்டும் ஒதுக்கிவிட முடியாது. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வங்காளதேசத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று கூறினார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!