2 பெண் குழந்தைகள் பெற்றதால் தகராறு.. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு!
திருப்பத்தூர் ஆம்பூர், மிட்டலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுதாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், சுதாவுக்கு 2 மகள்கள் உள்ளதால், சுதாவிடம் அவரது மாமியார் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 17) சுதா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக குடியாத்தம் மீனூர் பகுதியில் உள்ள சுதாவின் உறவினருக்கு சுதாவின் கணவர் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்கள், குடும்பத் தகராறு காரணமாக சுதாவை அவரது கணவர், மாமியார் அடித்துக் கொன்றுவிட்டதாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், சுதாவின் மாமனாரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சுதாவின் உறவினர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இறந்த பெண்ணின் மூத்த சகோதரி கூறுகையில், "சொத்தில் பங்கு கேட்டு சுதாவை சித்ரவதை செய்தனர். அவளை தாய் வீட்டிற்கு அனுப்பவில்லை. என்னிடமும் பேச வேண்டாம் என்று கூறினர். இதனால், திருமணத்திற்கு வாங்கி கொடுத்த பொருட்களை உடைத்தனர். திருமணமாகி, இரண்டு மகள்கள் இருப்பதாகவும், சுதாவின் கணவர் மட்டுமின்றி, அவரது மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ,” என் கண்ணீர் மல்க கூறினார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!