இயக்குநர் சிபி சக்ரவர்த்தி திருமணம்... சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா உட்பட பிரபலங்கள் நேரில் வாழ்த்து!
‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும், சாப்ட்வேர் இன் ஜினியரான ஸ்ரீ வர்ஷினிக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பிரபலங்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினர்.
ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூரில் பிளாட்டினம் மஹாலில் நேற்று முன் தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து நேற்று காலை திருமணமும் நடந்து முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் அட்லீ, தர்ஷன், இயக்குநர்கள் ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன், பாடலாசிரியர் விவேக், மிர்ச்சி விஜய், சிவாங்கி உட்பட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
2022ல் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூலை இந்தப் படம் பெற்றது. படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், சிபி சக்ரவர்த்தி தனது இரண்டாவது படத்தையும் சிவகார்த்திகேயன் வைத்து இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!