undefined

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தது குத்தமா? விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட இளைஞர்!

 

மியாமி சர்வதேச விமான நிலையம் அமெரிக்காவின் புளோரிடாவில் அமைந்துள்ளது. இங்கு 27 வயது இளைஞர் ஒருவர் தலை முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். இந்நிலையில், திடீரென அவரது தலையில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால், விமானப் பணிப்பெண்கள் வாலிபரை விமானத்தில் இருந்து இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் இளைஞர் விமானத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். இதுகுறித்து விமானப் பணியாளர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விமானத்திற்கு சென்று அவரை கைது செய்ததுடன், உடன் வந்த பெண்ணையும் கைது செய்து விமானத்தில் இருந்து கீழே இறக்கினர்.

இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விமானத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை