undefined

மாணவர்களுக்கு வைர மோதிரம் .... விஜய் அட்ராசிட்டி!

 
 

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கான்வென்ஷன் செண்டர். இன்று காலை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து, ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்துகிறார் நடிகர் விஜய்.முதற்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800 மாணவர்களுக்கு இன்று கல்வி விருது விழா விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார் விஜய்.  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிற்பகல்  அறுசுவையான சைவ விருந்தை கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், அதிக மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு வைர மோதிரங்களை பரிசாக நடிகர் விஜய் வழங்கி மேடையில் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் உள்ளார்.  

 


தமிழக வெற்றிக் கழகம் சார்பில்  நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை முதலே இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி  ஆனந்த் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேற்று நேரில் பார்வையிட்டார்.  

இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய், மாணவர்களிடையே 10 நிமிடங்கள் பேச இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக ஊக்கத்தொகை வழங்க உள்ளதால் அரசியல் கருத்துக்கள் இதில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ல்  கடந்த ஆண்டு இதே விழாவில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் பற்றி படியுங்கள் என நடிகர் விஜய் அறிவுறுத்தி பேசினார். அதே நேரத்தில் பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என பெற்றோருக்கு வலியுறுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.  

 அதில் முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா தொடங்கியுள்ளது. இந்த விழா நடைபெறும் அரங்கிற்கு நடிகர் விஜய் காலை 6 மணிக்கே விழா நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார். விழா ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.  அங்கு வெள்ளை நிற ஆடையணிந்தபடி வந்த விஜய் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை அருகில் அமர்ந்தார். அதனைத்தொடர்ந்து மேடைக்கும் வந்த விஜய், ''தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. துறையை தேர்ந்தெடுப்பதுபோல அரசியலையும் தேர்ந்தெடுக்க வேண்டும்' என பேசினார். கோவை, ஈரோடு, மதுரை உட்பட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கி வருகிறார். இந்நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உதவி ஆணையர் தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 6 மணி வரை இவ்விழா நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்துகொள்பவர்களுக்கு இன்று பிற்பகலில்  அறுசுவை சைவ விருந்து தயார் செய்யப்பட்டு வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!