’தல’ தோனி பைக்கில் ஜாலி ரைடு...  வைரல் வீடியோ!

 
 

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த தோனி, கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். 

ஒருமுறை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூட தோனியின் ஒரு பண்ணை வீட்டில் இருந்த பைக் கேரேஜைப் பார்த்து அதிர்ந்தே விட்டாராம். ஏனெனில் அந்த கேரேஜில் அத்தனை பைக்குகள் இருந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட பைக்குகள் தோனியிடம் இருக்கிறதாம். இதுவே குறைவான எண்ணிக்கை தான், இதற்கு மேலும் இருக்கக்கூடும்.இந்நிலையில், தோனி ராஞ்சி பகுதியில் YAMAHA R1-Z பைக்கில் ஜாலியாக ரைடு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!