undefined

 இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன் 3 குழந்தைகளுடன் தர்ணா!

 


திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாப்பாக்குடியில் வசித்து வருபவர்   பரமேஸ்வரி.  இவருக்கும், திருச்சி மாவட்டம் கருப்பம்பட்டியில் வசித்து வரும்  கர்ணனுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கமலேஷ் , அனுஷா , அனுஸ்ரீ என 3 குழந்தைகள் உள்ளனர்.கர்ணன் திருச்சியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

 இந்நிலையில் கர்ணன் தன்னை கொடுமைப்படுத்தியதாக தன்னை வீட்டை விட்டு விரட்டியதாகவும் தனது தாய் வீடான கீழப்பாப்பாக்குடிக்கு வந்த பரமேஸ்வரி, நேற்று தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தார்.கலெக்டர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து அவர் திடீரென்று தர்ணாவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து பரமேஸ்வரி  , ‘‘திருச்சியில் ஏப்ரல்  வரை நான் என் கணவரோடும், 3 குழந்தைகளோடும் வசித்து வந்தேன். என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தினமும் என்னை அடிப்பதும், சூடுவைத்துக் கொடுமைப்படுத்துவதுமாக இருந்தார்.


இது குறித்து  கணவரின் கொடுமைகள் தொடர்ந்தால் வேறு வழியின்றி  மே மாதம் என்னுடைய சொந்த ஊருக்கு வந்து விட்டேன்.எனது குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு உரிய பணம் கேட்டு தொடர்ந்து போராடி வருகிறேன். இது குறித்து நெல்லை   அலுவலகத்திலும்,  போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். வாழ வழியின்றி தவிக்கும் எங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதார பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.